வீடு புகுந்து பெண் போலீஸை பலாத்காரம் செய்ய முயன்ற ஏட்டு.. | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


Last Updated:

வீட்டில் தனியாக இருந்த பெண் போலீஸை செல்வன் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்

மாதிரிப்படம்
மாதிரிப்படம்

ஈரோட்டில் பெண் போலீஸை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஏட்டால் பரபரப்பு.

சேலம் புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டின் ஜீப் டிவைராக பணியாற்றி வருபவர் போலீஸ் ஏட்டு செல்வன்(வயது 32). இவரது மனைவி ஈரோடு ரயில்வே போலீஸில் பணியாற்றி வருகிறார். இவர் ஈரோடு பழைய ரயில்வே போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார்.  செல்வனுக்கும்  அவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் பெண் போலீஸ் ஒருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒரே துறையை சேர்ந்தவர்கள் என்பதால் அந்தபெண்ணும் நட்புடன் பேசி பழகி வந்துள்ளார்.

அந்த பெண் போலீஸ் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். அவருக்கு குழந்தைகள் இல்லை. சம்பவத்தன்று பெண் போலீஸ் வீட்டிற்கு செல்வன் சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த பெண்ணை செல்வன் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அவரது பிடிய்ல் இருந்து தப்பியவர் வீட்டிக்கு வெளியே ஓடி வந்து அக்கம்பக்கத்தினரின் உதவியை நாடினார்.

Also Read: ‘உன் அண்ணனுக்கு நடந்ததுதான் உனக்கும்’ – மழுப்பிய இளம்பெண்ணை தீர்த்துக்கட்டிய கள்ளக்காதலன்

இந்த சம்பவம் தொடர்பாக  ஈரோடு சூரம்பட்டி காவல்நிலையத்தில் பெண் போலீஸ் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணை செல்வன் தவறாக நடக்க முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து செல்வன் மீது வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல் விடுத்தல், பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்தனர்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *