Vaccine | இரவு முதல் காத்திருந்தும் தடுப்பூசி போடவில்லை.. ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்… | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


Last Updated:

ஈரோட்டில் உள்ள வீரப்பன்சத்திரத்தில் இரவு முழுவதும் காத்திருந்தும் தடுப்பூசி போடப்படாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வீரப்பன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 4 நாட்களாக தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இன்றும் தடுப்பூசி போடப்படும் என அறிவிப்பு பலகை இருந்ததால் அதிகாலை முதலே நூற்றுக்கணக்கானோர் காத்திருந்தனர். ஆனால் காலையில் வந்த மாநகராட்சி அதிகாரிகள் இன்று தடுப்பூசி போடப்படாது என தெரிவித்தனர். நேற்றைய அறிவிப்பு பலகையை அகற்ற மறந்துவிட்டதாகவும, நாளை முதல் மீண்டும் தடுப்பூசி போடப்படும் என்றும் கூறினர்.

அதனைக் கேட்டு ஆத்திரமடைந்த மக்கள் ஈரோடு – சத்தியமங்கலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். நாளைக்கான டோக்கனை இன்றே வழங்குமாறும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்தி அதிகாரிகள் கலைந்து போகச் செய்தனர்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *