பவானியில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து.. பெண் மருத்துவர் உள்பட மூவர் பலி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


Last Updated:

பவானியில் நடந்த சாலைவிபத்தில் பெண் மருத்துவர் உள்பட மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பவானியில் நடந்த சாலை விபத்து
பவானியில் நடந்த சாலை விபத்து

ஈரோடு மாவட்டம் பவானி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்ட  அரசு பெண் மருத்துவர் உள்பட மூன்று பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் இந்திராணி. மேச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  மருத்துவராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் இவரது கணவர் தேவநாதன் மற்றும் உறவினர் மகன் சத்தியசீலன் ஆகியோருடன் கோவை தனியார் கிட்னி மருத்துவமனையில் கணவருக்கு சிகிச்சை  சென்று விட்டு  இரவு பவானி வழியாக மேட்டூர் சாலையில் காரில் வீடு திரும்பிகொண்டு இருந்துள்ளனர். காரை பெண் மருத்துவரின் கணவர் தேவநாதன் ஓட்டி வந்துள்ளார்.

கார் காடப்பநல்லூர் பிரிவில் வந்த போது மேட்டூரில் இருந்து பவானி நோக்கி கொண்டிருந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் பயணம் செய்த மருத்துவர் இந்திராணி,அவரது கணவர் தேவநாதன் மற்றும் உறவினர் சத்தியசீலன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவம் குறித்து தகவலறிந்து  வந்த பவானி போலீசார் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை பவானி தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் நீண்ட நேரம் போராடி மூன்று பேர் உடலை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய  லாரி ஓட்டுநரையும் போலீசார் தேடி வருகின்றனர்.இந்த விபத்தால் பவானி முதல் மேட்டூர் வரை செல்லும் சாலையில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

செய்தியாளர்: பாபு (ஈரோடு)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *