ஒரு ஓட்டு கூட பெறாத அமமுகவைச் சேர்ந்த வேட்பாளர் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


Last Updated:

தன்னுடைய வாக்கு வேறொரு வார்டில் இருந்தால் தனது ஓட்டை கூட அவரால் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

வாக்கு எண்ணிக்கை - மாதிரிப்படம்
வாக்கு எண்ணிக்கை – மாதிரிப்படம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் 10ஆவது வார்டில் போட்டியிட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த வேட்பாளர் சண்முகம் ஒரு வாக்கு கூட வாங்கவில்லை. பேர்ட்டியிட்ட வேட்பாளர் தன்னுடைய வாக்கு வேறொரு வார்டில் இருந்தால் தனது ஓட்டை கூட தனக்கு செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் 5வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சதாசிவம் அதிமுக வேட்பாளர் தங்ககாஜை விட 6,488 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியம் குருடம்பாளையம் ஊராட்சி 9ஆவது வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் பாஜகவை சேர்ந்த, சுயேச்சை வேட்பாளர் 1 ஓட்டும், தேமுதிகவை சேர்ந்த வேட்பாளர் 2 ஓட்டும் பெற்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் காலியாக இருந்த 13 உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியம் குருடம்பாளையம் ஊராட்சி 9ஆவது வார்டு உறுப்பினருக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இந்த வார்டில் மொத்தம் 1,551 வாக்குகள் இருக்கும் நிலையில் 913 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. இதில் திமுக சார்பில் கட்டில் சின்னத்தில் போட்டியிட்ட அருள்ராஜ் என்பவர் 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் சங்கு சின்னத்தில் போட்டியிட்ட வைத்தியலிங்கம் 196 வாக்குகள் பெற்றுள்ளார்.

Must Read : வடிவேலு காமெடி பாணியில், பாரபட்சம் இல்லாமல் அனைத்து சின்னத்திலும் குத்து விட்ட வாக்காளர்!

இதே போல பாஜக சார்பில் அக்கட்சியின் வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் கார்த்திக், கார் சின்னத்தில் போட்டியிட்டு இருந்த நிலையில் ஒரே ஒரு வாக்கை மட்டுமே பெற்றார். இதே போல தேமுதிகவை சேர்ந்தவர் பெயின்டிங் பிரஸ் சின்னத்தில் போட்டியிட்ட ரவிக்குமார் 2 வாக்குகள் மட்டுமே பெற்றார். பாஜகவை சேர்ந்த வேட்பாளர் கார்த்திக் 4 ஆவது வார்டை சேர்ந்தவர் என்பதால் அவர் உட்பட அவரது குடும்பத்தினர் யாருக்கும் அந்த வார்டில் வாக்குகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *