நான் பொதுச்செயலாளர்.. காசு எல்லாம் கொடுக்க முடியாது – சுங்கச்சாவடியில் தகராறு செய்த அரசியல் கட்சி பிரமுகர் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


Last Updated:

Toll Gate Attack | சுங்கச்சாவடி தாக்குதல் விவகாரத்தில் மனித உரிமைகள் கழகம் என்ற அரசியல் கட்சியின் பொதுசெயலாளர் சுரேஷ் கண்ணன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுங்கச்சாவடியில் தகராறு
சுங்கச்சாவடியில் தகராறு

சுங்கச் சாவடியில் டிக்கெட் எடுப்பதில் தகராறில் ஈடுபட்டு சுங்கச் சாவடி ஊழியரை தாக்கிய மனித உரிமைகள் கழகம் என்ற அரசியல் கட்சி பொதுச்செயலாளர் சுரேஷ்கண்ணன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மனித உரிமைகள் கழகம் என்ற  அரசியல் கட்சியின் பொதுச்செயலாளர்  சுரேஷ்கண்ணன், தனது காரில் கோவையிலிருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலுள்ள  விஜயமங்கலம் சுங்க சாவடியில் சுங்க கட்டணம் செலுத்த மறுத்து, தான் அரசியல் கட்சியின் பொது செயலாளர் என்பதால் சுங்க கட்டணம் செலுத்த முடியாது என தெரிவித்த சுரேஷ்கண்ணனுக்கும் , சுங்கச் சாவடி ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் சுங்கச் சாவடி மேலாளர்  கணேசனை , மனித உரிமைகள் கழகம் என்ற  அரசியல் கட்சி பொதுசெயலாளர்  சுரேஷ்க ண்ணன்  தாக்கினார்.

Also Read: கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை.. ஆந்திராவில் மீட்ட போலீஸ்

இதனைத்தொடர்ந்து சுங்க சாவடி மேலாளர்  கணேசன் பெருந்துறை காவல்துறையினரிடம்   புகாரின் கொடுத்தார். புகாரின் பேரில் 5 பிரிவிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த பெருந்துறை காவல்துறையினர்  மனித உரிமைகள் கழகம் என்ற அரசியல் கட்சியின் பொதுசெயலாளர்  சுரேஷ்கண்ணன், அவருடைய ஒட்டுநர் சுடலைமுத்து உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.மேலும் இது தொடர்பாக  விசாரணைநடத்தி வருகின்றனர்.

செய்தியாளர்: பாபு (ஈரோடு)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *