Last Updated:
Gopichettipalayam Accident: வாகனம் மோதிய விபத்தில் சிக்கி 10 அடி தூரம் தூக்கி தூக்கிவீசப்பட்ட குழந்தை தலையில் பலத்த காயங்களுடன் கோபி தனியார் மருத்துவமனையில் அனுமதி
தாய் மற்றும் தம்பியுடன் சாலையை கடக்க முயன்ற 8 வயது சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அத்தாணி பகுதியை சேர்ந்தவர் மயில்வாகணன் – தெய்வப்பிரியா தம்பதியினர். இவர்களுக்கு ஹரினீஷ் என்ற 8 வயது மகனும், ரூபன் என்ற 5 வயதுடைய இன்னொரு குழந்தையும் உள்ளனர் . இந்நிலையில் மயில்வாகனம் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கோபி பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கடைக்கு ஜவுளி எடுப்பதற்காக சென்றனர்.அப்போது சாலையின் ஒரு புறத்தில் மயில்வாகணன் நின்று கொண்டு தனது மனைவி தெய்வப்ரியா மற்றும் இரண்டு குழந்தைகளை ஜவுளிக்கடைக்கு செல்லுமாறு அனுப்பியுள்ளார்.
அப்போது தெய்வப்ரியா தனது குழந்தைகளுடன் சாலையை கடக்க முயன்ற போது எதிர் பாராத விதமாக பின்னால் வந்த இருசக்கர வாகனம் மூவரின் மீதும் வேகமாக மோதியது இந்த விபத்தில் இரு வாகனம் குழந்தை ஹரினீஷ் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயங்களுடன் சாலையில் உருண்டு விழுந்தான். தலையில் பலத்த காயத்துடன் மயங்கி விழுந்த சிறுவன் ஹரினீசை அக்கம்பக்கத்தினார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து கோபி போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி தப்பி சென்ற போதை ஆசாமியை சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் தேடி வருகின்றனர்.
செய்தியாளர்: தினேஷ்
Feb 07, 2022 12:51 PM IST