2 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோடு – கோவைக்கு பயணிகள் ரயில் இயக்கம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈரோட்டில் இருந்து பயணிகள் ரயில் இயக்கப்படவில்லை. இதனால் ஈரோட்டிலிருந்து  கோவை, திருப்பூர், போன்ற பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

பயணிகள் ரயில்
பயணிகள் ரயில்
ஈரோடுகோவை இடையே 2 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் ரயில் இயக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈரோட்டில் இருந்து பயணிகள் ரயில் இயக்கப்படவில்லை. இதனால் ஈரோட்டிலிருந்து  கோவை, திருப்பூர், போன்ற பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதனால் பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் இன்று முதற்கட்டமாக ஈரோடு கோவை பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.

இதனை வரவேற்கும் விதமாக ரயிலுக்கு மாலை அணிவித்து தேங்காய் உடைத்த ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர்  பயணிகளுக்கு இனிப்புகளையும் வழங்கினர்.

-செய்தியாளர்: பாபு.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *