மர்மமான முறையில் 7 மயில்கள் உயிரிழப்பு – வனத்துறையினர் விசாரணை | ஈரோடு மாவட்ட செய்திகள் (Erode District News)


Last Updated:

Erode District : விவசாய பொருட்களை மயில்கள் சேதப்படுத்தியதால் மர்ம நபர்கள் யாராவது விஷம் வைத்தார்களா அல்லது மயில்களை வேட்டையாடி கொள்ளப்பட்டதா என மயில்களின் இறப்பிற்கான காரணம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெருந்துறை அருகே மர்மமான முறையில் 7 மயில்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தலையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது தோட்டத்தில் மர்மமான முறையில் மயில்கள் இறந்து கிடப்பதாக வனத்துறை அலுவலகத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் இறந்து கிடந்த 4 ஆண் மயில்கள் மற்றும் 3 பெண் மயில்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக தோட்ட உரிமையாளர் குப்புசாமியிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் விவசாய பொருட்களை மயில்கள் சேதப்படுத்தியதால் மர்ம நபர்கள் யாராவது விஷம் வைத்தார்களா அல்லது மயில்கள்  வேட்டையாடி கொள்ளப்பட்டதா என மயில்களின் இறப்பிற்கான காரணம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் : ஈரோடு : மா.பாபு.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *