Last Updated:
இளைஞரை பள்ளி மாணவியின் தந்தை மற்றும் அத்தை தாக்கியதில் தலையில் படுகாயம் அடைந்துள்ளார்
ஈரோடு மாவட்டம் பவானி அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் மீது தாக்குதல் நடத்தியதில் வெங்கடேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகேயுள்ள கீழ்வாணி மூங்கில்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ். பெயிண்டர் தொழிலாளியான இவர் தனது பாட்டியுடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாணவி வீட்டாரின் பெற்றோருக்கு தெரிய வந்ததையடுத்து இளைஞர் வெங்கடேஷை கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி இரவு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் வெங்கடேஷை மாணவியின் தந்தை மற்றும் அத்தை தாக்கியதில் தலையில் படுகாயம் அடைந்துள்ளார். இதனையடுத்து வெங்கடேஷ் அந்தியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதன் பின்னர் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் வெங்கடேஷ் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே வெங்கடேஷ் மீது தாக்குதல் நடத்திய மாணவியின் தந்தை கட்டுமான தொழிலாளியான சரவணன் மற்றும் அவரது அத்தை சித்ராவை ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : தினேஷ் (ஈரோடு)
Feb 11, 2022 12:25 PM IST