கடன் வாங்கிய பணத்தை கொடுக்க மறுத்த மகன்.. அரிவாளால் வெட்டிய தந்தை – ஈரோட்டில் பரபரப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


Last Updated:

Erode Crime : ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே குடி போதையில் பெற்ற மகனையே அரிவாளால் வெட்டிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

மகனை அரிவாளால் வெட்டிய தந்தை
மகனை அரிவாளால் வெட்டிய தந்தை
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எல்லமடை பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி இவரது மகன் லோகநாதன். இருவரும் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில்  லோகநாதன் ஊருக்கு அருகே உள்ள ஒரு மதுபானக்கடை அருகே  மது அருந்திக் கொண்டிருந்த போது அங்கு வந்த தந்தை பழனிச்சாமி அவரிடம் தன்னிடம் கடன் வாங்கிய பணத்தை  திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.

அப்போது கொடுத்த கடனை திருப்பி தரமுடியாது என்று லோகநாதன் கூறியதையடுத்து, ஆத்திரமடைந்த பழனிச்சாமி அவர் வைத்திருந்த அரிவாளால் அவரது மகனை சரமாரியாக வெட்டியதில் லோகநாதனின் தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது.உடனடியாக அருகிலிருத்தவர்கள் உதவியுடன் லோகநாதனை கோபி மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்த பின் அங்கிருந்து மேல் சிகிச்சைகாக கோவை அரசு மருத்துமணைக்கு கொண்டு சென்றனர்.

செய்தியாளர் – தினேஷ்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *