என்ன தம்பி இந்தப்பக்கம்.. காட்டு யானையின் திடீர் விசிட்டால் ஷாக்கான வாகன ஓட்டிகள் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


Last Updated:

சாலையை வழி மறித்து நின்ற ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சத்துக்கு உள்ளாகினர்.

காட்டு யானை
காட்டு யானை

சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் கேர்மாளம் செல்லும் சாலையில் ஒற்றை காட்டுயானை வாகனங்களை வழிமறித்து நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சத்துக்கு உள்ளாகினர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையைக் கடப்பது சாலையோரம் நின்று தீவனங்கள் உட்கொள்வதும் வாடிக்கையாகி வருகின்றன இந்நிலையில் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை ஒன்று ஆசனூரில் இருந்து கேர்மாளம் செல்லும் சாலையில் வாகனங்களை வழிமறித்து நின்றது.

பின்னர் சிறிது நேரம் சாலையில் நடமாடிய யானை வனப்பகுதிக்குள் சென்றது. சாலையை வழி மறித்து நின்ற ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சத்துக்கு உள்ளாகினர். அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள சாலை என்பதால் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை எச்சரிக்கையுடன்  இயக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

செய்தியாளர்: தினேஷ் 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *