இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் கைது… ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


Last Updated:

போலீஸார் நடத்திய விசாரணையில் திரைப்படத்தை பார்த்து அதைப்போல் தானும் இளம்பெண்ணை மிரட்டியதாக விசாரணையில் கூறியுள்ளார்.

இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது
இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

ஈரோட்டில் இளம் பெண் குளிப்பதை மறைந்திருந்து செல்போனில் படம் எடுத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்க முயன்ற  இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

பட்டுக்கோட்டையை சேர்ந்த வாலிபர் கண்ணன் ( வயது 29). இவர்  ஈரோட்டில் தங்கி, இறைச்சி கடையில் வேலை செய்து வருகிறார். இவரது குடியிருப்பு அருகில் திருப்பூரை சேர்ந்த பெண் ஒருவர் தங்கி அரசு வேலைக்காக படித்து வருகிறார்.   இந்நிலையில் கண்ணன் இளம்பெண் குளிப்பதை தனது செல்போன் கேமராவில் படம் பிடித்துள்ளார். இதனையறிந்த இளம்பெண் கண்ணன் இதுகுறித்து கேட்டுள்ளார்.

இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் கண்ணனை போலீசார் கைது செய்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் திரைப்படத்தை பார்த்து அதைப்போல் தானும் இளம்பெண்ணை மிரட்டியதாக விசாரணையில் கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட கண்ணனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஈரோடு  செய்தியாளர் : மா.பாபு 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *