அத்தாணி பேரூராட்சி 3வது வார்டு திமுக வேட்பாளர் ஐயப்பன் மாரடைப்பால் மரணம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


Last Updated:

Erode Athani : ஈரோடு மாவட்டம் அத்தாணி பேரூராட்சி 3ஆவது வார்டு திமுக வேட்பாளர் ஐயப்பன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அந்தியூர் திமுக சட்டமன்றத் உறுப்பினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அத்தாணி
அத்தாணி
ஈரோடு மாவட்டம் அத்தாணி பேரூராட்சிக்கு உட்பட்ட பெருமாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன். விவசாய தொழில் செய்து வரும் இவர் திமுகவில் பல வருடங்களாக வார்டு செயலாளராக இருந்தவர். இதனை தொடர்ந்து அத்தாணி பேரூராட்சியில் 15வார்டுக்கான நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.

அதன்படி, 3ஆவது வார்டு பகுதிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஐயப்பன் தொடர்ந்து வார்டு பகுதிக்கு உட்பட்ட வாக்காளர்கள் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில், நேற்று இரவு தனது பரபரப்புரை முடித்து விட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஐயப்பனுக்கு திடீரென நள்ளிரவில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

Must Read : பெண்களுக்கு மாதாமாதம் ரூ.1000 வரும் பட்ஜெட்டில் அறிவிப்பு… ஆர்.எஸ்.பாரதி தகவல்

இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்த போது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த அந்தியூர் திமுக சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஏஜி வெங்கடாசலம் நேரில் சென்று உயிரிழந்த திமுக வேட்பாளர் ஐயப்பனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

செய்தியாளர் : தினேஷ்,  கோபிசெட்டிப்பாளையம்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *