கள்ளக்காதலுக்காக கணவனை கொலை செய்ய துணிந்த மனைவி – காதலனுடன் கம்பி எண்ணும் பரிதாபம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


Last Updated:

கள்ளகாதலன் சச்சிதானந்தன் உடன் சேர்ந்து கணவன் சீனிவாசனை தீர்த்து கட்ட மைதிலி திட்டமிட்டுள்ளார்.

சச்சிதானந்தம்,  மைதிலி
சச்சிதானந்தம், மைதிலி

கள்ளக்காதலியின் கணவனை நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து கத்தியால் குத்திய வழக்கில் திமுக பிரமுகரின் மகன் மற்றும் கள்ளக்காதலி இருவரும் கைது.

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நாமக்கல் பாளையத்தை சேர்ந்த அயலூர் முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவர் சின்னசாமி மகன் சச்சிதானந்தம். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவருக்கும் குதிரைகள்பாளையத்தை சேர்ந்த சீனிவாசன் மனைவி மைதிலி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.

இந்த விஷயம் கணவன் சீனிவாசனுக்கு தெரிந்து இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கள்ளகாதலன் சச்சிதானந்தன் உடன் சேர்ந்து கணவன் சீனிவாசனை தீர்த்து கட்ட மைதிலி திட்டமிட்டிருந்தார்.  இதனிடையே கடந்த நான்கு  மாதங்களுக்கு முன்பு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து இரவு கம்பெனி வேனை ஓட்டி வந்த சீனிவாசனை சமத்துவபுரம் என்ற பகுதியில்  திமுக பிரமுகரின் மகன் சச்சிதானந்தனும்  அவரது நண்பர்கள் நான்கு பேரும் சேர்ந்து ஒரு காரில் வந்து வேனை வழிமறித்து சீனிவாசனை கத்தியால் சராமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடினர்.

இதைகண்ட அக்கம்பக்கதினர் சீனிவாசனை மீட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தார். இதுகுறித்து  சிறுவலூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக காவல்துறையினர் தேடி வந்தனர். ஒரு கட்டத்தில் சீனிவாசனின் மனைவி மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டு மைதிலியிடம் கிடுக்கு பிடி விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸாரின் விசாரணையில்  தானும் தனது  கள்ளக்காதலன் சச்சிதானந்தம் சேர்ந்துதான் சீனிவாசனை கொலை செய்ய முயற்சித்தோம் என ஒப்புகொண்டதையடுத்து, மாலதி, மற்றும் சச்சிதானந்தம் இரண்டு பேரையும் கைது செய்தது கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மாலதியை கோவை சிறையிலும், சச்சிதானந்தத்தை ஈரோடு சிறையிலும் அடைத்தனர். மீதமுள்ள மூன்று பேரையும் தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து சிறுவலூர் காவல்துறையிடம் கேட்டபொழுது இதுகுறித்து பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தனர்.

செய்தியாளர்: தினேஷ்

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *