300 பேருக்கு மத்தியணவு சமைக்கும் சமையல் கூடம் சுகாதாரமற்ற முறையில், பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் பயன்படுத்துவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனை தொடர்ந்து சமையல் கூடம் முழுவதும் டைல்ஸ் கொண்டு செப்பனிட்டும், வர்ணம் அடித்தும் அழகுப்படுத்தினர்.
மேலும் பிளாஸ்டிக் பொருட்களை சமையல் கூடத்திலிருந்து முற்றிலும் ஒழிக்கும் விதமாக பெற்றோர்களிடம் கல்விச்சீராக பெற்று சமையல் கூடத்திற்கு தேவையான எவர்சில்வர் மற்றும் மண்பாத்திரங்களை பெற்றார். மேலும் மாணவிகளுக்கு சுகாதார முறையில் சமைக்கும் பொருட்டு R.O water பொருத்தி, அந்த நீரில் மட்டுமே சமைக்க உத்தரவிட்டார்.
மேலும் காய்கறிகளை சமைப்பதற்கு முன்பு மஞ்சள் கொண்டு கழுவியும், சமைக்கும் சமையலர் நகங்கள் வெட்டி இருக்க வேண்டும், வளையல் மற்றும் மோதிரங்கள் அணிந்து இருக்கக்கூடாது என்றும், முடி உணவில் விழாமல் இருக்க தலையில் தொப்பி அணிந்து மாணவிகளுக்கு சமையல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, அதை முறையாக சமையலர்கள் கடைப்பிடிக்கிறார்களா என்பதை அறிய ஆசிரியர் குழு ஒன்றை நியமித்தார் தலைமை ஆசிரியர்.
மேலும் பள்ளியிலேயே ஆர்கனிக் காய்கறி தோட்டம் அமைத்து அதில் விளையும் காய்கறிகளை வாரத்தில் ஒரு்நாள் பயன்படுத்தவும் , மாணவிகள் சாப்பிட பயன்படுத்தும் தட்டுகளை சூடுநீரில் சுத்தம் செய்து காய வைத்த பின்னரும் , சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு சுடுதண்ணீர் மட்டுமே கொடுக்க உத்தரவிட்டார்.
மேலும் இவை அனைத்தும் முறையாக, தவறாமல் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை அறிய இரண்டு சிசிடிவி கேமராவை சமையல் அறையில் பொருத்தி தனது அறையிலிருந்து கண்காணித்து வந்தார்.
இதனிடையே ஆய்வுக்கு வர வேண்டி விண்ணப்பித்தனர். இதன் அடிப்படையில் பள்ளியின் சமையல் கூடத்தில் 4 முறை ஆய்வு செய்த ISO தரச்சான்று அதிகாரிகள் சுகாதார முறையிலும், பிளாஸ்டிக் பயன்படுத்துவதில்லை என்பதாலும், பணியாளர்களின் நேர்த்தியாலும், உணவின் சுவையாலும், மாணவிகளின் சுகாதாரத்தில் அக்கறை செலுத்துவதாலும் கடந்த மாதம் ISO தரச்சான்றிதழ் வழங்கினார்.
தமிழகத்தில் முதன்முறையாக அரசுப்பள்ளியின் சமையல் கூடத்திற்கு ISO தரச்சான்றிதழ் கிடைத்திருப்பது பெருமைப்படக்கூடிய விஷயம் என தெரிவிக்கும் தலைமை ஆசிரியர் மாலா இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து, சமையல் கூடம் மட்டுமின்றி பள்ளியில் ஒவ்வொரு கட்டிடங்களுக்கும் தமிழகத்தின் வீர மங்கைகள் பெயரும், பள்ளி நேரத்தில் ஏற்படும் மன அழுத்ததை போக்க, வகுப்பு அறைகளின் முன் தூரி கட்டி விளையாடவும் , மாணவிகளுக்கு இரும்புச்சத்து கிடைக்க முருங்கை சூப் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், டிஜிட்டல் நூலகம் உள்ளிட்ட, வசதிகளுடன் தனியார் பள்ளியை மிஞ்சும் வகையில் அசத்தி வருகிறது இந்த அரசுப் பள்ளி.