திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர் படுகொலை… ஈரோட்டில் பரபரப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


Last Updated:

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மாதிரிப்படம்
மாதிரிப்படம்

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் தலவுமலை பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல். இவர் சில தினங்களுக்கு திமுகவிலிருந்து பா.ஜ.கவில் இணைந்தார். இந்த நிலையில்  இன்று வடிவேல் தனது வீட்டில் ரத்தகாயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அரச்சலூர் காவல்துறையினர் வடிவேலின் உடலை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே வடிவேல் திமுகவிலிருந்து விலகி பா.ஜ.க வில் இணைந்த்தால் திமுகவினர் வடிவேலை அடித்து கொலை செய்ததாக கூறி , கொலை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி  பாஜக மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி தலைமையில் பாஜகவினர் ஈரோடு – காங்கேயம்  சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்ட பா.ஜ.கவினருடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய அரச்சலூர் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தின் பேரில் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *