யூடியூப் வீடியோ பார்த்து கொள்ளையடிக்க வந்தேன் – நகைக்கடையில் திருட முயன்ற இளைஞர் கைது | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


Last Updated:

நகைக்கடையில் இளைஞர் ஒருவர் இக்கடையின் பக்கவாட்டு சுவரை இடித்து நகைகளை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார்.

நகைக்கடையில் கொள்ளையடிக்க முயன்ற இளைஞர்
நகைக்கடையில் கொள்ளையடிக்க முயன்ற இளைஞர்

சத்தியமங்கலம் நகைக்கடையில் யூடியூப் வீடியோவை பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது  செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கடைவீதி பகுதியில் பத்ரிநாதன் என்பவருக்கு சொந்தமான கன்னிகா ஜுவல்லரி என்ற நகை கடை உள்ளது. நேற்று அதிகாலை மர்ம நபர் ஒருவர் இக்கடையின் பக்கவாட்டு சுவரை இடித்து நகைகளை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். இடிக்கும் சத்தத்தைக் கேட்டு அருகே வசிக்கும் மக்கள் எழுந்து வந்து பார்த்த போது அந்த மர்ம நபர் தப்பி ஓடியுள்ளார்.

இதுகுறித்து கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சத்தியமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கரூர் மாவட்டம், கட்டளை கிருஷ்ணராயபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டி என்ற இளைஞரை புளியம்பட்டி அருகே சத்தியமங்கலம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

செய்தியாளர்: தினேஷ்



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *