Last Updated:
அதிமுக சார்பில் போட்டியிட்ட சி. பாரதி 1037 வாக்குகளும், சுயேட்சையாக போட்டியிட்ட செ. பானுலட்சுமி 1037 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து நடைபெற்ற குலுக்கலில் அதிமுக வேட்பாளர் பாரதி வெற்றி பெற்றார்.
ஈரோடு மாநகராட்சியில் அதிமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் சம வாக்குகள் பெற்றனர். இதையடுத்து மாநகராட்சி ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற குலுக்கலில் அதிமுக வேட்பாளர் பாரதி வெற்றி பெற்றார்.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக ஈரோடு மாநகராட்சியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. 54-வது வார்டில் மொத்தம் 3276 வாக்குகள் பதிவாயின. இன்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட்ட சி. பாரதி 1037 வாக்குகளும், சுயேட்சையாக போட்டியிட்ட செ. பானுலட்சுமி 1037 வாக்குகளும் பெற்றனர்.
இவர்களுக்கு அடுத்தபடியாக திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் போட்டியிட்ட க. சுதா 598 வாக்குகளும் பெற்றனர். அதிமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் சம எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற்ற நிலையில், குலுக்கல் முறையில் வெற்றி வேட்பாளரை முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவகுமார் முன்னிலையில் நடந்த குலுக்கலில், அதிமுக வேட்பாளர் சி.பாரதி வெற்றி பெற்றார். இதையடுத்து அவருக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.