மாணவர்களை பெயிண்ட் அடிக்க வைத்த பெண் தலைமையாசிரியர் – சமூகவலைத்தளத்தில் வைரலாகும் காட்சிகள் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


Last Updated:

Erode Kodumudi | மாணவர்களை கட்டாயப்படுத்தி அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பெயிண்ட் அடிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பள்ளி மாணவர்கள் பெயிண்ட் அடிக்கும் காட்சிகள்
பள்ளி மாணவர்கள் பெயிண்ட் அடிக்கும் காட்சிகள்

ஈரோடு அருகே அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர், மாணவர்களை பள்ளி வளாகத்தில்  பெயிண்ட் அடிக்க சொல்லி மாணவர்கள் பெயிண்ட் அடிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது..

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள பெரியூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது அரசு நடுநிலைப் பள்ளி. இந்த பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக சோளாங்கபாளையம் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி  என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் தனலட்சுமி  பள்ளியில் உள்ள சுவர்களுக்கு வர்ணம் தீட்ட பள்ளியில் பயிலும் மாணவர்களை கட்டாயப்படுத்தி அங்குள்ள சுவர்களுக்கு பெயின்ட் அடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.

செய்தியாளர்: மா.பாபு ( ஈரோடு)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *