Last Updated:
Erode District : பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்க வேண்டும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு மாத உதவித்தொகை கொண்டு வந்ததை வரவேற்பதாகவும், அதே சமயம் அரசு பள்ளி மட்டுமின்றி அரசு உதவி பெறும் பள்ளி மாணவியர்களுக்கும் உயர்கல்வி படிக்கும் போது மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ஈரோட்டில் பேட்டியளித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சட்டப்பேரவைத் தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை மிகுந்த நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் திமுக அரசு நிறைவேற்றி வருகின்றது. பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேகதாது அணை தொடர்பாக கர்நாடக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி , நிதி ஒதுக்கீடு செய்தது தவறானது. அரசியல் ஆதாயத்திற்கு மேற்கொள்ளுகின்ற முயற்சி . மத்திய அரசு மேகதாது அணை பிரச்சனையில் நடுநிலையோடு செயல்பட்டு உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய முத்தரசன் , தமிழகத்தில் சாதியின் பெயரால் ஆவண படுகொலைகள் நடைபெற்று வருகின்றது. ஆவணப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டத்தை நடைபெறுகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே முதல்வர் நிறைவேற்ற வேண்டும். நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநருக்கு அனுப்பிய மசோதாவை இன்னும் குடியரசுத்தலைவருக்கு அனுப்பவில்லை. தமிழக மக்களை மதித்து , சட்டமன்ற மசோதாவை மதித்து ஆளுநர் குடியரசுத்தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்றார்.
மேலும் தாலிக்கு தங்கம் திட்டம் என்பது திருமண உதவி திட்டம் அல்ல. பெண்களை படிக்க வைக்க கொண்டு வரப்பட்ட திட்டம். தற்போது உயர்கல்வி கல்வி படிக்கும் பெண்களுக்கு மாத உதவித்தொகை கொண்டு வந்ததை வரவேற்கின்றோம். அரசு பள்ளி மட்டுமின்றி அரசு உதவி பெறும் பள்ளி மாணவியர்களுக்கும் உயர்கல்வி படிக்கும் போது மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆளுநரை சந்திப்பது ஒன்றும் பெரிய விசயமில்லை. விளம்பத்திற்காகவே பல்லேறு விசயங்களை அண்ணாமலை செய்து வருவதாகவும், பொழுதுபோக்கிற்காகவே பேசுகிறார் என்றார். 5 மாநில தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பெட்ரோல் , டீசல் , சிலிண்டர் விலையை உயர்த்தியது ஏற்க முடியாது கடும் கண்டத்துக்குரியது. இதை திரும்ப பெற வேண்டும் என்றார்.
செய்தியாளர் : ஈரோடு : மா.பாபு.
