ஈரோடு டாஸ்மாக்கில் ஒரு ஃபுல்லுக்கு ரூ.20 கூடுதலாக விற்பனை – மதுப்பிரியர்கள் புகாரையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
Last Updated:Oct 30, 2021 6:47 AM IST டாஸ்மாக் நிர்வாகத்திற்கு மதுபிரியர்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு புகார் சென்றது. டாஸ்மாக் கடையில் ரெய்டு வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் விலைக்கு மதுவகைகளை விற்பனை செய்வதாக எழுந்த புகாரினையடுத்து ஈரோட்டில் டாஸ்மாக் எலைட் கடையில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். ஈரோடு அடுத்துள்ள திண்டலில் இருந்து வில்லசரம்பட்டி செல்லும் சாலையில் மாருதிநகரில் டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில்…